தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கையாளரும், சமூக சேவகருமான டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் உடல் நலக் குறைவால் மறைந்தார். அனைத்துக் கட்சித்தலைவர்களும், பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துகிற சாக்கில் நடந்த அரசியல் கூத்து நடத்திய கருணாநிதி விசயகாந்து வரும் வழியில் காத்திருந்து வணக்கம் செலுத்தி அதனைப் புகைப்படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் “விசயகாந்த் தன்னைச் சந்தித்து நலம் விசாரித்ததாக” செய்தி வெளியிட்டு புளகாங்கிதமடைந்தார்.
சந்திப்பு நடக்கும் முன்னும் பின்னும் நடந்தது என்ன என்பது நமது கற்பனையில்;
இடம்: கருணாநிதி இல்லம். அனைவரையும் சந்திக்கும் கூடம்/வரவேற்பறை.
பங்கேற்பாளர்கள்: கருணாநிதி, துணைவி, உதவியாளர், சில கட்சிப் பிரமுகர்கள், கருணாநிதியை பராமரிப்பவர்.
(சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த செய்தி மாலையில் கருணாநிதிக்குத் தெரிவிக்கப் படுகிறது. அப்படியா எத்தனை மணிக்கு என்ன விபரம் எனக் கேட்டவரிடம், இன்று மாலையில் மருத்துவமனையில் மறைந்ததாகவும் மறுநாள் நண்பகலுக்கு மேல் பெசண்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சரியெனக் கேட்டுக்கொண்ட கருணாநிதி சில கணக்குகள் போட்டுக்கொண்ட பிறகு நடந்த உரையாடல் பின்வருமாறு)
கருணாநிதி (உதவியாளரிடம்): என்னய்யா.. அவரும் இழவு வீட்டுக்கு வருவாரில்ல.. ஏற்கனவே ஒருமுறை அவர் திருச்சிக்கு வரும்போது சுத்திலும் அணையகட்டி பார்த்து வணக்கம் வச்சுரலாம்னு முயற்சி பண்ணப்போ எப்படியோ மீடியாவுக்கு விசயம் கசிஞ்சு அவர் உசாராகி பார்க்க முடியாம போயிடுச்சு. இந்த முறை அவர் வரதுக்கு முன்னாடி போயி அங்கே நிக்கணும்யா.. இதைவிட்டா பார்க்கிறதுக்கு கோயம்பேடு போகணும்யா..அங்கே போயி காத்துக்கிடந்து பார்க்கமுடியலைனா எதிர்க்கட்சிக்காரன் பூராம் கழுவி ஊத்துவான்.. இங்க ஒருவேளை பார்க்கமுடியலைனா கூட அசிங்கப்பட்டது யாருக்கும் தெரியாது.. கமுக்கமா இருந்துக்கலாம்..எப்ப வர்றாருனு கேட்டுச் சொல்லுயா...
உதவியாளர்(கருணாநிதியிடம்):கேட்டுட்டேன் தலைவரே.. அவரு காலைலதான் வர்றாராம்.
கருணாநிதி(உதவியாளரிடம்): காலைலயா? அதுவரை யாருமே போகலைனா தப்பாயிடுமேய்யா..தம்பி ஸ்டாலினை நைட்ல போயி அட்டெனன்ஸ் போடச் சொல்லு..... காலைல அவர் வர்ற நேரமா பார்த்து தற்செயலா வந்த மாதிரி வாசல்ல நின்னுக்கிறேன்.. எப்படியும் ஒரு வணக்கம் கூடவா வைக்காம போயிடுவாரு... எப்படியாவது கூட்டணில இழுத்து போட்டுறனும்யா... தமிழ்நாட்டுலயே நம்ம கூட்டணி வைக்காத ஒரே கட்சி தே.மு.தி.க. மட்டும்தான்.. பழைய ஆளுங்க எல்லாருக்கும் நம்ம வண்டவாளம் தெரிஞ்சு போச்சு.. அவர விட்டா நமக்கு வேற வழியே இல்லே.. யாரும் இல்லைனா கால்ல கூட விழுந்திறலாம்.. இந்த மீடியாக்காரப் பசங்க போட்டோ புடிச்சுப் போட்டு அசிங்கப் படுத்திடுவானுங்களேனு பார்க்கிறேன்.
(மறுநாள் காலை:எழவு வீட்டில் விசயகாந்தைத் தற்செயலாகச் சந்தித்தார் கருணாநிதி. வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டனர்)
(கருணாநிதி அந்தப்படத்தைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விசயகாந்த் சந்த்தித்து நலம் விசாரித்ததாக நிலைத்தகவல் வெளியிட்டதோடு அனைத்து ஊடகங்களுக்கும் அந்தப் படத்தைத் தனக்குத் தானே என்கிற முறையில் வெளியிட்டு மகிழ்கிறார்)
காட்சி 2:
இடம்: விசயகாந்த் இல்லம்.
பங்கேற்பாளர்கள்: விசயகாந்து, சுதீஷ், பிரேமலதா..
விசயகாந்து: மாப்ழ சுதீழு... எங்க போனாலும் இந்தாளு வந்து நின்னு வனக்கம் வைக்குறானே. இப்படிதான் திருச்சிக்கு நம்ம போறதை தெரிஞ்சுகிட்டு அங்கே வந்து சுத்தி வளைக்கப் பாத்தானுங்க. இவனுங்க கிட்டேருருந்து எஸ்கேப்பாவுறதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு... நம்ம போற இடத்தையெல்லாம் எவனோ அந்தாளுக்குப் போட்டுக்குடுத்துர்றாய்ங்க மாப்ழ.. நம்ம கூட்டத்துலயே எதோ ஒரு கருப்பாடு இருக்கு.. சீக்கிரம் கண்டுபிடிக்கணும் இல்லேனா.. சிக்கலாயிப் போவும்டியேய்.
சுதீஷ்: மாமா.. நாந்தான் மாமா சொன்னேன். கட்சித் தலைவர்கள் எல்லாரும் ஒரு இடத்துக்கு போறப்போ முட்டி மோதிக்காம இருக்க வெவ்வேற நேரம் ஃபிக்ஸ் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் இடைஞ்சலில்லாம போயிட்டு வந்துடுவாங்கனு பன்ரொட்டியார் சொன்னாரு.. நானும் சரி அதுக்குதான் கருணாநிதியோட ஆளுங்க யதார்த்தமா கேக்குறாய்ங்க போலனு பதார்த்தமா நீங்க வர்ற நேரத்தை சொல்லிட்டேன். என்னைப்போயி கருப்பாடு.. சிவப்பாடுனு சொல்லிட்டீங்களே மாமா... :’( அக்கா மாமாவைப்பாரு என்னைத் திட்டுறாரு..
சுதீஷ்: மாமா.. நாந்தான் மாமா சொன்னேன். கட்சித் தலைவர்கள் எல்லாரும் ஒரு இடத்துக்கு போறப்போ முட்டி மோதிக்காம இருக்க வெவ்வேற நேரம் ஃபிக்ஸ் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் இடைஞ்சலில்லாம போயிட்டு வந்துடுவாங்கனு பன்ரொட்டியார் சொன்னாரு.. நானும் சரி அதுக்குதான் கருணாநிதியோட ஆளுங்க யதார்த்தமா கேக்குறாய்ங்க போலனு பதார்த்தமா நீங்க வர்ற நேரத்தை சொல்லிட்டேன். என்னைப்போயி கருப்பாடு.. சிவப்பாடுனு சொல்லிட்டீங்களே மாமா... :’( அக்கா மாமாவைப்பாரு என்னைத் திட்டுறாரு..
பிரேமலதா: ஏங்க என் தம்பியைப்போயி திட்டுறீங்க...
விசயகாந்து:(பிரேமலதாவைப் பார்த்து) மாப்ழதான் சொன்னாருனு தெரிஞ்சா திட்டுவனா பிரேமா.. நான் எவனோ கட்சிக்காரப்பய போட்டுக்குடுக்கிறான்னுல திட்டுனேன்
விசயகாந்து:(பிரேமலதாவைப் பார்த்து) மாப்ழதான் சொன்னாருனு தெரிஞ்சா திட்டுவனா பிரேமா.. நான் எவனோ கட்சிக்காரப்பய போட்டுக்குடுக்கிறான்னுல திட்டுனேன்
(சுதீஷ் பக்கமாகத் திரும்பி) அட.. மக்குப் பய மாப்புழ.. அவய்ங்க அப்டிதான் கூப்பிடுவாய்ங்க.. இப்ப பார்த்தேல்ல.. எழவு வீட்டில குறுக்க வழிய மறிச்சு நிக்குறாரேனு ஒரு வணக்கம் வச்சேன். அதைப் போட்டோ புடிச்சு சின்னப்புள்ளத்தனமா அதென்னது ஃபேசுபுக்கு அதுல போட்டு விசயகாந்து என்னைச் சந்தித்து நலம் விசாரித்தபோதுனு விளம்பரம் பண்ணிட்டுருக்காரு.. அந்தாள இப்பவே கூட்டணிக்குள்ளே விட்டா கூடாரத்துக்குள்ள ஒட்டகம் புகுந்த கதைதான் மாப்புழ.. தமில்நாட்ல நம்மதான் எதிர்க்கட்சி. நம்மகிட்டே 29 எம்மெல்லே இருக்காய்ங்க.. அவய்ங்க 23 தான். நாமதான் பெரிய கச்சி. இப்பவே போயி தலைய குடுத்தா கிட்னிய எடுத்துறுவாய்ங்க மாப்புழ.. இனிமே போண் பண்ணாய்ங்கனா தேர்தல் கிட்டே நெருங்கும்போது வரச்சொல்லு.. அப்பதான் நமக்கு 25 அவிய்ங்களுக்கு 15னு பேச முடியும்.. பேரம்பேசி முடிக்கிறப்போ ஃபிப்டி ஃபிப்டினாவுது முடிக்கலாம். சும்மா சும்மா போற வர்ற வழிலலாம் நின்னுகிட்டு வணக்கம் வைக்குறது.. அதை போட்டோ புடிச்சு ஃபேசுபுக்குலபோடுரதெல்லாம் வேண்டாம்னு ஸ்டிரிகா சொல்லிடு ,மாப்ழ..ஆங்..
தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணிக்காட்சிகள் அரங்கேறும் போது அடுத்தடுத்த காட்சிகளும் அரங்கேறும்.

அருமையான கற்பனை நண்பரே! படித்தேன் ரசித்தேன்....
பதிலளிநீக்கு@வினோத்
நீக்குநன்றி நண்பா!
:-)
நல்ல ரசிக்கும்படியான கற்பனை. கேப்டனின் "மாப்ழ" சூப்பர்.
பதிலளிநீக்கு@கும்மாச்சி
நீக்குநன்றிண்ணே!
வாய் லைட்டா கொளறிடுச்சு!!! அதான்.. ;-)