கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சாரக்குழுவின் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
பா.ஜ.க.வின் இந்துத்துவக் கொள்கைகளுக்கு மோடி மட்டுமே பொறுப்பானவரல்ல. மோடியில்லாமல் வேறொரு கேடி வந்தாலும் பா.ஜ.க. இந்துத்துவக் கட்சிதான்.
ஆனால் என்னவோ மோடி தேர்தல்பணிக்குழுத் தலைவரான பிறகுதான் பா.ஜ.க. இந்துத்துவக் கொள்கையையே கண்டுபிடித்ததுபோல தி.மு.க.வும் அது சார்ந்த ஊடகங்களும், அந்தக்கட்சியின் சார்பாக இணைய தளங்களில் செயல்பட்டுவரும் சிலரும் புரளி கிளப்பி வருகின்றனர். அதை நம்பும் சில இசுலாமிய நண்பர்களும் பகடைக்காய்களாக மாறி தி.மு.க.விற்காக பரிந்து பேசவும் எழுதவும் துவங்கியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு, காவிரி, ஸ்டெர்லைட், கூடங்குளம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, காவிரிப்படுகையில் மீத்தேன் எரிவாயுத்திட்டம், கிரானைட் கொள்ளை, 2ஜி இமாலய ஊழல், மணற்கொள்ளை, வேலை நியமனத்தில் ஊழல் கொள்ளை எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத்திலே ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யத் துணைபோனது என தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் செய்த துரோகத்தால் தனிமைப்பட்டுப் போயிருக்கிறது தி.மு.க. தற்போது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அடித்த அந்தர்பல்டிகள் மூலம் நாட்டு மக்களிடம் அசிங்கப்பட்டு நிற்கிறது தி.மு.க.
இவ்வாறு அசிங்கப்பட்டு நிற்கிற தி.மு.க.விற்கு முட்டுக்கொடுக்க வாய்ச்சவடாலில் பேர்போன தி.மு.க. உடன்பிறப்புகளே திக்கித்திணறும் போது அவர்களுக்கு கைகொடுப்பது போல வந்ததுதான் மோடி குறித்த அறிவிப்பு. எடுப்பார் கைப்பிள்ளைகளைப் போல மாறிப்போன இசுலாமிய பதிவர்களும், முகநூல் பயனர்களும் மாறிப்போனதுதான் கொடுமை. இன்றைய நிலையில் தி.மு.க. மீது அத்தனை விமர்சனக்கணைகளையும் தாங்கிக் கொண்டு அசிங்கப்படுவது மோடி பீதியைக் காட்டி கருணாநிதி கும்பலால் பகடைக்காயாக்கப் பட்ட ஒரு சில இசுலாமிய நண்பர்கள்தான்.
குஜராத்தில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மதமோதல்களை ஊக்குவித்து பல்லாயி்ரக்கணக்கான இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதும், இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதும் மறுக்க முடியாத உண்மை. இசுலாமியர்கள் ஒருபோதும் மோடியையோ, பா,ஜ,க.வையோ ஆதரிக்கமாட்டார்கள் என்பதோடு மதச்சார்பற்ற இந்தியர்களும், தமிழர்களும் இசுலாமியர்களோடு சேர்ந்து பா.ஜ.க.வைப் புறக்கணிப்பர் என்பதும் உண்மை.
ஆனால் அதற்காக பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரசு, தி.மு.க. கூட்டணியை ஆதரிப்போர் மனசாட்சியற்றவர்கள். காலிஸ்தான் கேட்டுப் போராடிய குழுவைச் சேர்ந்த் ஒரு சீக்கிய இளைஞரால் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து டெல்லியிலும் வட இந்தியாவின் மற்ற பாகங்களிலும் வசித்த ஒவ்வொரு சீக்கியனும் தேடிப் பிடித்து துரத்தித் துரத்திக் கொல்லப்பட்டான். குஜராத்தில் நடைபெற்றதை விட பன்மடங்கு வன்முறை சீக்கியர்கள் மீது ஏவிவிடப்பட்டது. காங்கிரசால் திட்டமிடப்பட்ட கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டத்தோடு அவர்களின் உடமைகளனைத்தும் சூறையாடப்பட்டு நிர்க்கதியாக்கப் பட்டனர்.
இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலை குறித்து நம் தமிழ் மக்களுக்கு இங்கே மீண்டும் விவரிக்கப் போவதில்லை. ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப்பட அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்துத் துணை போனது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி.
இவ்வாறான இனப்படுகொலைகளை அரங்கேற்றிய காங்கிரசையா பா.ஜ.க.விற்கு மாற்றாகப் பரிந்துரைக்கிறீர்கள்? இலங்கைத் தமிழர்கள் இனப்படுகொலையைச் சொன்னால் வேறு நாட்டுத் தமிழர்கள் இனப்படுகொலையைவிட குஜராத்தி முஸ்லீம்களின் இனப்படுகொலையைக் கவனியுங்கள் எனக் கூறும் கனவான்களே.. சீக்கியர்களின் இனப்படுகொலையென்ன இங்கிலாந்திலா நடந்தது. அந்த இனப்படுகொலைகளை நடத்தியது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தானே..
இந்திய குஜராத்தி முஸ்லிம்களின் உயிர் மட்டுமே உயிர், இந்திய பஞ்சாப் சீக்கியர்களின் உயிர் உயிரல்ல என்கிறீர்களா? தமிழீழத்திலே நம் தொப்புள்கொடி உறவுகளின் உயிர் உயிரல்ல என்கிறீர்களா?
சீக்கியர்களை இனப்படுகொலை செய்த காங்கிரசு சீக்கியரான மன்மோகன்சிங்கை பிரதமராக்கிவிட்டதே.. சரியாய்ப்போச்சு என்கிறீர்களா? அதே கணக்குப்போட்டுதான் அப்துல் கலாம் என்கிற இசுலாமியரை குடியரசுத் தலைவராக்கியது பா.ஜ.க. உங்கள் கணக்கு சரியாய்ப் போய்விடவில்லையா?
உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எல்லாவற்றிகும் மேலாக தமிழகத்தில் மோடிக்கோ, பா.ஜ.க.வுக்கோ சிறிதும் செல்வாக்கில்லை. இவ்வாறு இல்லாத பேயை தனது அரசியல் இலாபத்திற்காக இசுலாமியர்கள் முன்காட்டி பீதியை ஏற்படுத்திவிட்டு தன் குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவிகள் பெற்றுத் தருவதில் மும்மரமாகி விட்டார் கருணாநிதி. பதவி சுகத்திற்காக எந்த சமரசத்திற்கும் ஆயத்தமானவர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த வரலாறு. இப்போது ஒருசில இசுலாமியர்களால் தாங்கிப்பிடிக்கப்படுகிற கருணாநிதி கடந்த காலங்களில் பதவிக்காக பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்காதவரா? தற்போது நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்களேயானால் தன் மகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அவர்கள் காலிலே விழுந்திருக்க மாட்டாரா? வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.கூட்டணியில் சேரமாட்டார் என உத்தரவாதமேதுமுள்ளதா?
தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி என்கிற காரணி இந்துத்துவ சக்திகளுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. ஆனால் சீக்கியர்களையும் ஈழத் தமிழர்களையும் இனப்படுகொலை செய்த காங்கிரசும் அதற்குத் துணைபோன தி.மு.க.வும் இன்னமும் உயிர்ப்போடிருக்கின்றன. இசுலாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும், மனிதநேயர்களும் எதிர்க்க வேண்டியது இல்லாத எதிரியான மோடியல்ல.. நம் கண்முன்னே உலவிவரும் மோடிக்கு சற்றும் சளைக்காத காங்கிரசு, தி.மு.க, என்கிற எதிரிகள்தான்.
மோடி பீதியைக் காட்டி காங்கிரசு, தி.மு.க. என்கிற புதைகுழியில் மீண்டும் தமிழர்களையும் தமிழ் மக்களையும் தள்ளிவிட நடக்கும் முயற்சியை தடுத்துக் கொள்வதும் தமிழர்களின், தமிழகத்தின் நலனைப் பாதுகாத்துக் கொள்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை.

Nicely written. But nobody will care. Everybody has a hidden political agenda.
பதிலளிநீக்கு