திங்கள், 31 டிசம்பர், 2012

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் தாயகத்தில் சூரியஒளி மின் விளக்குகள்:




தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடும், அரசு இந்த பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் திணறி வருவதும் அனைவரும் அறிந்ததே..
அதே வேளையில் தமிழக மக்களுக்கும், மண்ணுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் பெருங்கேடான, மின்னுற்பத்திக்கு பெரிய அளவில் உதவாத அணு உலையைத் தமிழக மண்ணில் - கூடங்குளத்தில் திட்டமிட்டு இந்த மின் வெட்டைக் காரணமாகக் காட்டி மத்திய மாநில அரசுகள் முயற்சிப்பதும் அனைவரும் அறிந்ததே..
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் அணு உலைத் திட்டங்களை மக்கள் நலனை கருத்தில் கொண்டு துவக்கம் முதலே எதிர்த்து வந்திருக்கிறது.
வெறுமனே எதிர்ப்பு என்கிற அளவில் இல்லாமல் மாற்று மின்னுற்பத்திக்கான ஆலோசனைகளையும், கருத்தரங்கங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக நாளை ஜன.1 ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் ம.தி.மு.க. இணைய அணியின் பங்களிப்போடு நிறுவப்பட்ட சூரிய ஒளி மின் விளக்குகளை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திறந்து வைக்கிறார்.
அவ்விழாவைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பும் அதனைத் தொடர்ந்து தொண்டர்களையும் சந்திக்க இருக்கிறார் வைகோ அவர்கள்.
ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தாயகத்திலும் பொங்கல் தினத்தில் கலிங்கப்பட்டியிலும் தொண்டர்களைச் சந்திப்பது வைகோவின் வழக்கம்.
மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை ஊக்குவிப்போம். சுற்றுச் சூழலைப் பாதுகாத்து வருங்கால சந்ததியிடம் நாம் வாழும் பூமியை மாசற்ற வாழ்வியல் சூழ்நிலைகளுடன் ஒப்படைப்போம்.