திங்கள், 22 ஏப்ரல், 2013

விஜயகாந்தைச் சந்தித்தார் கருணாநிதி: குற்றம் நடந்தது என்ன? எபிசோடு I

தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிக்கையாளரும், சமூக சேவகருமான டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் உடல் நலக் குறைவால் மறைந்தார். அனைத்துக் கட்சித்தலைவர்களும், பிரமுகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்துகிற சாக்கில் நடந்த அரசியல் கூத்து நடத்திய கருணாநிதி விசயகாந்து வரும் வழியில் காத்திருந்து வணக்கம் செலுத்தி அதனைப் புகைப்படமெடுத்து தனது முகநூல் பக்கத்தில் “விசயகாந்த் தன்னைச் சந்தித்து நலம் விசாரித்ததாக” செய்தி வெளியிட்டு புளகாங்கிதமடைந்தார்.

சந்திப்பு நடக்கும் முன்னும் பின்னும் நடந்தது என்ன என்பது நமது கற்பனையில்;

காட்சி 1:

இடம்: கருணாநிதி இல்லம். அனைவரையும் சந்திக்கும் கூடம்/வரவேற்பறை.
பங்கேற்பாளர்கள்: கருணாநிதி, துணைவி, உதவியாளர், சில கட்சிப் பிரமுகர்கள், கருணாநிதியை பராமரிப்பவர்.

(சிவந்தி ஆதித்தனார் அவர்கள் மறைந்த செய்தி மாலையில் கருணாநிதிக்குத் தெரிவிக்கப் படுகிறது. அப்படியா எத்தனை மணிக்கு என்ன விபரம் எனக் கேட்டவரிடம், இன்று மாலையில் மருத்துவமனையில் மறைந்ததாகவும் மறுநாள் நண்பகலுக்கு மேல் பெசண்ட் நகரில் இறுதிச் சடங்குகள் நடைபெற இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.  சரியெனக் கேட்டுக்கொண்ட கருணாநிதி சில கணக்குகள் போட்டுக்கொண்ட பிறகு நடந்த உரையாடல் பின்வருமாறு)



கருணாநிதி (உதவியாளரிடம்): என்னய்யா.. அவரும் இழவு வீட்டுக்கு வருவாரில்ல.. ஏற்கனவே ஒருமுறை அவர் திருச்சிக்கு வரும்போது சுத்திலும் அணையகட்டி பார்த்து வணக்கம் வச்சுரலாம்னு முயற்சி பண்ணப்போ எப்படியோ மீடியாவுக்கு விசயம் கசிஞ்சு அவர் உசாராகி பார்க்க முடியாம போயிடுச்சு. இந்த முறை  அவர் வரதுக்கு முன்னாடி போயி அங்கே நிக்கணும்யா.. இதைவிட்டா பார்க்கிறதுக்கு கோயம்பேடு போகணும்யா..அங்கே போயி காத்துக்கிடந்து பார்க்கமுடியலைனா எதிர்க்கட்சிக்காரன் பூராம் கழுவி ஊத்துவான்.. இங்க ஒருவேளை பார்க்கமுடியலைனா கூட அசிங்கப்பட்டது யாருக்கும் தெரியாது.. கமுக்கமா இருந்துக்கலாம்..எப்ப வர்றாருனு கேட்டுச் சொல்லுயா...
உதவியாளர்(கருணாநிதியிடம்):கேட்டுட்டேன் தலைவரே.. அவரு காலைலதான் வர்றாராம்.

கருணாநிதி(உதவியாளரிடம்): காலைலயா? அதுவரை யாருமே போகலைனா தப்பாயிடுமேய்யா..தம்பி ஸ்டாலினை நைட்ல போயி அட்டெனன்ஸ் போடச் சொல்லு..... காலைல அவர் வர்ற நேரமா பார்த்து தற்செயலா வந்த மாதிரி வாசல்ல நின்னுக்கிறேன்.. எப்படியும் ஒரு வணக்கம் கூடவா வைக்காம போயிடுவாரு... எப்படியாவது கூட்டணில இழுத்து போட்டுறனும்யா... தமிழ்நாட்டுலயே நம்ம கூட்டணி வைக்காத ஒரே கட்சி தே.மு.தி.க. மட்டும்தான்.. பழைய ஆளுங்க எல்லாருக்கும் நம்ம வண்டவாளம் தெரிஞ்சு போச்சு.. அவர விட்டா நமக்கு வேற வழியே இல்லே.. யாரும் இல்லைனா கால்ல கூட விழுந்திறலாம்.. இந்த மீடியாக்காரப் பசங்க போட்டோ புடிச்சுப் போட்டு அசிங்கப் படுத்திடுவானுங்களேனு பார்க்கிறேன்.

(மறுநாள் காலை:எழவு வீட்டில் விசயகாந்தைத் தற்செயலாகச் சந்தித்தார் கருணாநிதி. வணக்கங்களைப் பரிமாறிக்கொண்டனர்)





(கருணாநிதி அந்தப்படத்தைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விசயகாந்த் சந்த்தித்து நலம் விசாரித்ததாக நிலைத்தகவல் வெளியிட்டதோடு அனைத்து ஊடகங்களுக்கும் அந்தப் படத்தைத் தனக்குத் தானே என்கிற முறையில் வெளியிட்டு மகிழ்கிறார்)

காட்சி 2:

இடம்: விசயகாந்த் இல்லம்.
பங்கேற்பாளர்கள்: விசயகாந்து, சுதீஷ், பிரேமலதா..

விசயகாந்து: மாப்ழ சுதீழு... எங்க போனாலும் இந்தாளு வந்து நின்னு வனக்கம் வைக்குறானே. இப்படிதான் திருச்சிக்கு நம்ம போறதை தெரிஞ்சுகிட்டு அங்கே வந்து சுத்தி வளைக்கப் பாத்தானுங்க. இவனுங்க கிட்டேருருந்து எஸ்கேப்பாவுறதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு... நம்ம போற இடத்தையெல்லாம் எவனோ அந்தாளுக்குப் போட்டுக்குடுத்துர்றாய்ங்க மாப்ழ.. நம்ம கூட்டத்துலயே எதோ ஒரு கருப்பாடு இருக்கு.. சீக்கிரம் கண்டுபிடிக்கணும் இல்லேனா.. சிக்கலாயிப் போவும்டியேய்.

சுதீஷ்: மாமா.. நாந்தான் மாமா சொன்னேன். கட்சித் தலைவர்கள் எல்லாரும் ஒரு இடத்துக்கு போறப்போ முட்டி மோதிக்காம இருக்க வெவ்வேற நேரம் ஃபிக்ஸ் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் இடைஞ்சலில்லாம போயிட்டு வந்துடுவாங்கனு பன்ரொட்டியார் சொன்னாரு.. நானும் சரி அதுக்குதான் கருணாநிதியோட ஆளுங்க யதார்த்தமா கேக்குறாய்ங்க போலனு பதார்த்தமா நீங்க வர்ற நேரத்தை சொல்லிட்டேன். என்னைப்போயி கருப்பாடு.. சிவப்பாடுனு சொல்லிட்டீங்களே மாமா... :’( அக்கா மாமாவைப்பாரு என்னைத் திட்டுறாரு..

பிரேமலதா: ஏங்க என் தம்பியைப்போயி திட்டுறீங்க...

விசயகாந்து:(பிரேமலதாவைப் பார்த்து) மாப்ழதான் சொன்னாருனு தெரிஞ்சா திட்டுவனா பிரேமா.. நான் எவனோ கட்சிக்காரப்பய போட்டுக்குடுக்கிறான்னுல திட்டுனேன் 

(சுதீஷ் பக்கமாகத் திரும்பி) அட.. மக்குப் பய மாப்புழ.. அவய்ங்க அப்டிதான் கூப்பிடுவாய்ங்க.. இப்ப பார்த்தேல்ல.. எழவு வீட்டில குறுக்க வழிய மறிச்சு நிக்குறாரேனு ஒரு வணக்கம் வச்சேன். அதைப் போட்டோ புடிச்சு சின்னப்புள்ளத்தனமா அதென்னது ஃபேசுபுக்கு அதுல போட்டு விசயகாந்து என்னைச் சந்தித்து நலம் விசாரித்தபோதுனு விளம்பரம் பண்ணிட்டுருக்காரு.. அந்தாள இப்பவே கூட்டணிக்குள்ளே விட்டா கூடாரத்துக்குள்ள ஒட்டகம் புகுந்த கதைதான் மாப்புழ.. தமில்நாட்ல நம்மதான் எதிர்க்கட்சி. நம்மகிட்டே 29 எம்மெல்லே இருக்காய்ங்க.. அவய்ங்க 23 தான். நாமதான் பெரிய கச்சி. இப்பவே போயி தலைய குடுத்தா கிட்னிய எடுத்துறுவாய்ங்க மாப்புழ.. இனிமே போண் பண்ணாய்ங்கனா தேர்தல் கிட்டே நெருங்கும்போது வரச்சொல்லு.. அப்பதான் நமக்கு 25 அவிய்ங்களுக்கு 15னு பேச முடியும்.. பேரம்பேசி முடிக்கிறப்போ ஃபிப்டி ஃபிப்டினாவுது முடிக்கலாம். சும்மா சும்மா போற வர்ற வழிலலாம் நின்னுகிட்டு வணக்கம் வைக்குறது.. அதை போட்டோ புடிச்சு ஃபேசுபுக்குலபோடுரதெல்லாம் வேண்டாம்னு ஸ்டிரிகா சொல்லிடு ,மாப்ழ..ஆங்..

தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணிக்காட்சிகள் அரங்கேறும் போது அடுத்தடுத்த காட்சிகளும் அரங்கேறும்.

சனி, 20 ஏப்ரல், 2013

இப்படிக்கு தோழர் செங்கொடி - ஆவணப்படம். டிவிடி ரிப்.


மூவர் தூக்கினைத் தடுத்து நிறுத்தக்கோரி நெருப்புக்குத் தன்னுயிரை இரையாய்த் தந்து ஈகம் செய்திட்ட தோழர் செங்கொடியின் தியாகத்தை பதிவு செய்த ஆவணப்படம்தான் “இப்படிக்கு தோழர்.செங்கொடி”

இவ்வரலாற்று ஆவணம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டியது என்கிற நோக்கத்திலேயே இதற்கான ”டொரண்ட்” பதிவிறக்கச் சுட்டியைப் பகிர்ந்து கொள்கிறேன்.


பார்த்துவிட்டு பின்வரும் சந்ததிகளுக்காகப் பாதுகாக்க வேண்டிய இந்த குறுவட்டு சென்னையில் டிஸ்கவரி புத்தகக் கடையில் வெறும் ரூ.100 க்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.  வாங்குகிற திறனும், வசதியும் படைத்தவர்கள் தயவுசெய்து வாங்கி நம் சமகால வரலாற்றைப் படமாக்கிய ஆவணப்படக் குழுவினருக்கு உதவ வேண்டுமென வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.


பேராசிரியர் புல்லர் அவர்களின் மரணதண்டனைக்கான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் தூக்குக் கயிறும் இறுகத் துவங்கியுள்ளது.  பஞ்சாப் அரசு பேராசிரியர் புல்லரின் தூக்குத்தண்டனையை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி நமக்கு வழிகாட்டியுள்ளது. தமிழகத்தில் மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி அதன்மூலம் தமிழக அரசுக்கு நிர்ப்பந்த்தத்தினை ஏற்படுத்தி தமிழக அரசு மூவர் தூக்கினை நிறுத்தி வைத்திட அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிடுமானால், அவர்களின் தூக்குக்கயிறினை அறுத்தெறியும் முயற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.

பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற முன்னெடுப்புகளைச் செய்துவரும் வேளையில் ஏப்ரல் 30ல் சென்னையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டியது மிக அவசியம்.

மரண தண்டனையை ஒழித்திடுவோம். மனிதநேயம் காத்திடுவோம்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

அமாவாசை கருணாநிதியும் அதற்கடுத்த நாள் ஜெ.வும் - 1

டுவிட்டர் ஒரு நீரோடை போன்றது. அதில் புதுப்புது செய்திகள் நொடிக்கொருதரம் நம் கண்முன்னே மின்மினிப் பூச்சி மாதிரி வந்து ஓடி மறையும். அரட்டையைத் தாண்டி நேரக்கோட்டில் வந்து போகும் மிகச்சுவாராசியமான தகவல்கள்தான் ஐந்தாண்டுகளைத் தாண்டியும் டுவிட்டரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 140 எழுத்துகள் என்கிற கட்டுப்பாட்டுடன் நம் கருத்துகளை திடமாகவும், தெளிவாகவும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகிறது டுவிட்டர்.

அண்மையில் டுவிட்டர் நண்பர்களுள் ஒருவரான செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுடன் உரையாட நேர்ந்தது. நான் நீண்ட நாட்களாக கருணாநிதிக்கு எதிர் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்து வருவதை கவனித்து வந்திருப்பார் போல. அவர் தீவிர கருணாநிதி ஆதரவாளராக இருப்பினும்  பிற கருணாநிதி ஆதரவாளர்களைப் போலவே வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு அதனை யாரிடமும் காட்டிக்கொள்ளமாட்டார். சமீபத்தில் ”டெசோ” நாடகக் கம்பேனியில் நித்தமொரு நாடகம் என்கிற வகையில் புதிய புதிய காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பழைய சம்பவங்களை, கருணாநிதியின் தமிழினத் துரோகங்களையெல்லாம் மக்கள் மறந்து விட்டிருப்பர் என எண்ணிக்கொண்டு, இப்போது வாயைக் கொடுக்கலாம் என்று என்னிடம் பேச வந்திருப்பார் போலும்.மறதிதானே தமிழக மக்களின் சாபக்கேடும் கருணாநிதி போன்ற நபர்களின் முதலீடும்.

செய்யாறு அருண் பேச வருகையில் தனியாளாக வரப் பயந்தாரோ என்னவோ, கருணாநிதியும் அவர் குடும்பமும் வெளித்தள்ளும் குப்பைகளை வியந்தோதிவரும் @thedonashok என்கிற நபரை கோர்த்து இழுத்து வந்தார். என்ன நோக்கமிருந்ததெனத் தெரியவில்லை.ஒருவேளை என்னோடு விவாதம் செய்து கருணாநிதி கும்பலின் துரோகங்களை நியாயப்படுத்தி புள்ளிவிபரங்களை அள்ளி விடுவார் என கருதியிருக்கக்கூடும். அந்த நபரோ ஆங்காங்கே கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களின் வசனத்தை காப்பியடித்து கருணாநிதிக்கெதிரான தலைவர்கள் மீது கருத்துகள், “கமெண்டு”கள் என்கிற போர்வையில் அவதூறுகளை இணையத்தில் எழுதி கருணாநிதியின் ரசிகர்களுக்கு சிரிப்புக் காட்டி காலத்தை ஓட்டி வருபவர் போல. கருணாநிதியே ஒரு காலி பெருங்காய டப்பா. இதில் இவர் கூட்டி வந்த நபர் ஒரு முனகலைக்கூடச் செய்யாமல் காணாமல் போய் விட்டார்.

விவாதத்தின் மையம் இதுதான்.

அனைவரும் கருணாநிதியை மிக மோசமான அரசியல்வாதி எனக் கருணாநிதியைச் சுட்டுகிறார்களே? திட்டுகிறார்களே? அப்படியென்றால் ஜெயலலிதா என்ன யோக்கியமா? ஜெயலலிதாவை ஏன் திட்டுவதில்லை.

தமிழகத்தின் கீழ்த்தரமான அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா? 

தமிழகத்திற்கு அதிக அளவில் தீங்கிழைத்தவர் கருணாநிதியா? ஜெயலலிதாவா?

அரசியல் நாகரீகம் பேணாத அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா?

இது போன்று கருணாநிதியையும் ஜெ.வையும் ஒப்பிடக்கூடிய வகையிலான கேள்விகள்.

ஒப்பீடு என வந்துவிட்ட பிறகு என்னளவில் மேலே கேட்டது போன்ற கேள்விகளுக்கான பதில் கருணாநிதிக்கு முதலிடமும் ஜெ.வுக்கு இரண்டாமிடமும் வழங்குவதே சரியென்றேன். மேலும் விளக்கங்கள் வேண்டுமெனில் ஒவ்வொரு நிகழ்வாக “கேஸ் பை கேஸ்” எவ்வாறு கருணாநிதி தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றினார் என்பதை விளக்கவும் ஆயத்தமானேன்.

அவரும் புதிய சட்டசபை, நூலகம், சமச்சீர்கல்வி, தமிழ் புத்தாண்டு என ஜெ.மீது சில குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஜெ.தானே கருணாநிதியைவிட மோசம் எனச் சொன்னார். ஜெ. நல்லவரென்றோ அவரை ஆதரிப்பதோ எனது நோக்கமில்லை. கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ஜெ.எவ்வளவோ மேல்.

2011ல் தமிழினத் துரோகி கருணாநிதியை வீட்டுக்கனுப்பி ஜெ. ஆட்சிக்கு வந்தபிறகு..

”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கினை நிறுத்தக்கோரும் தீர்மானம்.
முல்லைப்பெரியாறு அணையைக் காக்க நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டம்.
காவிரியில் தமிழக உரிமையைக் காக்க நடத்திய சட்டப்போராட்டம்.
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் தமிழீழம் குறித்து பேசுகிற, போராடுகிற உரிமையை/சுதந்திரத்தை வழங்கியது.”

என்பன போன்ற மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரிய செயல்களைச் செய்தவர். இதற்கெல்லாம் பாராட்டவில்லையெனில் தமிழன் நன்றி மறந்தவன் ஆவான்.



அண்ணா உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய தி.மு.க.வை கபளீகரம் செய்திட கருணாநிதி செய்த தகிடுதத்தங்களையும், பித்தலாட்டங்களையும், தமிழக அரசியலையும் தமிழ் நாட்டையும் எவ்வாறு பாழ்படுத்தினார் என்பதையும், தன் குடும்ப உறுப்பினர்கள் அப்பாவி மக்கள் உழைத்துச் சேர்த்த சொத்தினை அபகரிக்கவும், அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடவும் திட்டமிட்டு சொந்தக் கட்சிக்காரர்களுக்கு சில எலும்புத்துண்டுகளை போட்டுவிட்டு  குடும்ப உறுப்பினர்களைக் கட்சியிலும் அரசிலும் உயர் பதவிகளில் ஏற்றி வைத்தது குறித்தும் பல்வேறு துறை சார்ந்தோர் பலநூறு பதிவுகளைச் செய்திட்ட பிறகும் எனது மனதில் பட்டவைகளை, எனது பார்வையில் பதிவு செய்திட வேண்டும் அதையும் கருணாநிதி சாகும் முன் எழுதிவிட வேண்டுமென வெகுநாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். செத்தபிறகு கருணாநிதி போன்ற நபர்களுக்கும் ஊர் ஊருக்கு சிலை வைத்து புனிதர் பட்டம் வழங்கி விடுவர் என்பதை கருத்தில் கொண்டே இந்த சாகும்முன் பதிவுத் திட்டம்.



கவிதாயினி தாமரை அவர்கள் ஒரு கூட்டத்தில் ”கருணாநிதி ஒரு அமாவாசை ஜெ. அதற்கடுத்த நாள்” என்று தமிழகத்தையும், தமிழர்கள் வாழ்வையும் இருளில் தள்ளியவர் கருணாநிதி என்கிற பொருள்பட கூறிய சொற்றொடரை இந்த ஒப்பீட்டுப் பதிவுகளுக்கு தலைப்பாக வைப்பது சாலப் பொருந்துமெனக் கருதுகிறேன். தலைப்பு வழங்கிய கவிதாயினி தாமரை அவர்களுக்கு நன்றி.


ஒரு பதிவிற்கு ஒரு நிகழ்வு மட்டும் எடுத்துக்கொண்டு விரிவாக அலசவேண்டும் என எண்ணியிருக்கிறேன்.கருணாநிதி பலநூறு ஆண்டுகாலம் வாழவேண்டும், அவர் வாழும் வரை இந்த பதிவையும் நீண்ட நெடுந்தொடராக எழுத வேண்டுமென்பதே என் அவா. இந்தத் தொடர் பதிவை எழுத ஊக்கமளித்த செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுக்கு நன்றி!!!

தமிழகத்திற்கு புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டுவதில் கருணாநிதி செய்த கீழ்த்தரமான அரசியலும் அதனை மருத்துவமனையாக மாற்றிய ஜெ.வின் பழிவாங்கலும் அடுத்த பதிவில்...

(தொடரும்..)