மூவர் தூக்கினைத் தடுத்து நிறுத்தக்கோரி நெருப்புக்குத் தன்னுயிரை இரையாய்த் தந்து ஈகம் செய்திட்ட தோழர் செங்கொடியின் தியாகத்தை பதிவு செய்த ஆவணப்படம்தான் “இப்படிக்கு தோழர்.செங்கொடி”
இவ்வரலாற்று ஆவணம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டியது என்கிற நோக்கத்திலேயே இதற்கான ”டொரண்ட்” பதிவிறக்கச் சுட்டியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பேராசிரியர் புல்லர் அவர்களின் மரணதண்டனைக்கான மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் தூக்குக் கயிறும் இறுகத் துவங்கியுள்ளது. பஞ்சாப் அரசு பேராசிரியர் புல்லரின் தூக்குத்தண்டனையை நிறுத்திட தீர்மானம் நிறைவேற்றி அதனை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி நமக்கு வழிகாட்டியுள்ளது. தமிழகத்தில் மீண்டுமொரு எழுச்சியை உருவாக்கி அதன்மூலம் தமிழக அரசுக்கு நிர்ப்பந்த்தத்தினை ஏற்படுத்தி தமிழக அரசு மூவர் தூக்கினை நிறுத்தி வைத்திட அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றிடுமானால், அவர்களின் தூக்குக்கயிறினை அறுத்தெறியும் முயற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.
பல்வேறு அமைப்புகளும் தங்களால் இயன்ற முன்னெடுப்புகளைச் செய்துவரும் வேளையில் ஏப்ரல் 30ல் சென்னையில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. அனைவரும் பங்கேற்க வேண்டியது மிக அவசியம்.
மரண தண்டனையை ஒழித்திடுவோம். மனிதநேயம் காத்திடுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக