டுவிட்டர் ஒரு நீரோடை போன்றது. அதில் புதுப்புது செய்திகள் நொடிக்கொருதரம் நம் கண்முன்னே மின்மினிப் பூச்சி மாதிரி வந்து ஓடி மறையும். அரட்டையைத் தாண்டி நேரக்கோட்டில் வந்து போகும் மிகச்சுவாராசியமான தகவல்கள்தான் ஐந்தாண்டுகளைத் தாண்டியும் டுவிட்டரை உயிர்ப்புடன் வைத்துள்ளது. 140 எழுத்துகள் என்கிற கட்டுப்பாட்டுடன் நம் கருத்துகளை திடமாகவும், தெளிவாகவும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவுகிறது டுவிட்டர்.
அண்மையில் டுவிட்டர் நண்பர்களுள் ஒருவரான செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுடன் உரையாட நேர்ந்தது. நான் நீண்ட நாட்களாக கருணாநிதிக்கு எதிர் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்து வருவதை கவனித்து வந்திருப்பார் போல. அவர் தீவிர கருணாநிதி ஆதரவாளராக இருப்பினும் பிற கருணாநிதி ஆதரவாளர்களைப் போலவே வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு அதனை யாரிடமும் காட்டிக்கொள்ளமாட்டார். சமீபத்தில் ”டெசோ” நாடகக் கம்பேனியில் நித்தமொரு நாடகம் என்கிற வகையில் புதிய புதிய காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து பழைய சம்பவங்களை, கருணாநிதியின் தமிழினத் துரோகங்களையெல்லாம் மக்கள் மறந்து விட்டிருப்பர் என எண்ணிக்கொண்டு, இப்போது வாயைக் கொடுக்கலாம் என்று என்னிடம் பேச வந்திருப்பார் போலும்.மறதிதானே தமிழக மக்களின் சாபக்கேடும் கருணாநிதி போன்ற நபர்களின் முதலீடும்.
செய்யாறு அருண் பேச வருகையில் தனியாளாக வரப் பயந்தாரோ என்னவோ, கருணாநிதியும் அவர் குடும்பமும் வெளித்தள்ளும் குப்பைகளை வியந்தோதிவரும் @thedonashok என்கிற நபரை கோர்த்து இழுத்து வந்தார். என்ன நோக்கமிருந்ததெனத் தெரியவில்லை.ஒருவேளை என்னோடு விவாதம் செய்து கருணாநிதி கும்பலின் துரோகங்களை நியாயப்படுத்தி புள்ளிவிபரங்களை அள்ளி விடுவார் என கருதியிருக்கக்கூடும். அந்த நபரோ ஆங்காங்கே கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களின் வசனத்தை காப்பியடித்து கருணாநிதிக்கெதிரான தலைவர்கள் மீது கருத்துகள், “கமெண்டு”கள் என்கிற போர்வையில் அவதூறுகளை இணையத்தில் எழுதி கருணாநிதியின் ரசிகர்களுக்கு சிரிப்புக் காட்டி காலத்தை ஓட்டி வருபவர் போல. கருணாநிதியே ஒரு காலி பெருங்காய டப்பா. இதில் இவர் கூட்டி வந்த நபர் ஒரு முனகலைக்கூடச் செய்யாமல் காணாமல் போய் விட்டார்.
விவாதத்தின் மையம் இதுதான்.
அனைவரும் கருணாநிதியை மிக மோசமான அரசியல்வாதி எனக் கருணாநிதியைச் சுட்டுகிறார்களே? திட்டுகிறார்களே? அப்படியென்றால் ஜெயலலிதா என்ன யோக்கியமா? ஜெயலலிதாவை ஏன் திட்டுவதில்லை.
தமிழகத்தின் கீழ்த்தரமான அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா?
செய்யாறு அருண் பேச வருகையில் தனியாளாக வரப் பயந்தாரோ என்னவோ, கருணாநிதியும் அவர் குடும்பமும் வெளித்தள்ளும் குப்பைகளை வியந்தோதிவரும் @thedonashok என்கிற நபரை கோர்த்து இழுத்து வந்தார். என்ன நோக்கமிருந்ததெனத் தெரியவில்லை.ஒருவேளை என்னோடு விவாதம் செய்து கருணாநிதி கும்பலின் துரோகங்களை நியாயப்படுத்தி புள்ளிவிபரங்களை அள்ளி விடுவார் என கருதியிருக்கக்கூடும். அந்த நபரோ ஆங்காங்கே கவுண்டமணி, வடிவேலு, விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்களின் வசனத்தை காப்பியடித்து கருணாநிதிக்கெதிரான தலைவர்கள் மீது கருத்துகள், “கமெண்டு”கள் என்கிற போர்வையில் அவதூறுகளை இணையத்தில் எழுதி கருணாநிதியின் ரசிகர்களுக்கு சிரிப்புக் காட்டி காலத்தை ஓட்டி வருபவர் போல. கருணாநிதியே ஒரு காலி பெருங்காய டப்பா. இதில் இவர் கூட்டி வந்த நபர் ஒரு முனகலைக்கூடச் செய்யாமல் காணாமல் போய் விட்டார்.
விவாதத்தின் மையம் இதுதான்.
அனைவரும் கருணாநிதியை மிக மோசமான அரசியல்வாதி எனக் கருணாநிதியைச் சுட்டுகிறார்களே? திட்டுகிறார்களே? அப்படியென்றால் ஜெயலலிதா என்ன யோக்கியமா? ஜெயலலிதாவை ஏன் திட்டுவதில்லை.
தமிழகத்தின் கீழ்த்தரமான அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா?
தமிழகத்திற்கு அதிக அளவில் தீங்கிழைத்தவர் கருணாநிதியா? ஜெயலலிதாவா?
அரசியல் நாகரீகம் பேணாத அரசியல்வாதி கருணாநிதியா? ஜெயலலிதாவா?
இது போன்று கருணாநிதியையும் ஜெ.வையும் ஒப்பிடக்கூடிய வகையிலான கேள்விகள்.
ஒப்பீடு என வந்துவிட்ட பிறகு என்னளவில் மேலே கேட்டது போன்ற கேள்விகளுக்கான பதில் கருணாநிதிக்கு முதலிடமும் ஜெ.வுக்கு இரண்டாமிடமும் வழங்குவதே சரியென்றேன். மேலும் விளக்கங்கள் வேண்டுமெனில் ஒவ்வொரு நிகழ்வாக “கேஸ் பை கேஸ்” எவ்வாறு கருணாநிதி தமிழகத்தில் மிகவும் கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றினார் என்பதை விளக்கவும் ஆயத்தமானேன்.
அவரும் புதிய சட்டசபை, நூலகம், சமச்சீர்கல்வி, தமிழ் புத்தாண்டு என ஜெ.மீது சில குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஜெ.தானே கருணாநிதியைவிட மோசம் எனச் சொன்னார். ஜெ. நல்லவரென்றோ அவரை ஆதரிப்பதோ எனது நோக்கமில்லை. கருணாநிதியுடன் ஒப்பிடுகையில் ஜெ.எவ்வளவோ மேல்.
2011ல் தமிழினத் துரோகி கருணாநிதியை வீட்டுக்கனுப்பி ஜெ. ஆட்சிக்கு வந்தபிறகு..
”பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கினை நிறுத்தக்கோரும் தீர்மானம்.
முல்லைப்பெரியாறு அணையைக் காக்க நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டம்.
காவிரியில் தமிழக உரிமையைக் காக்க நடத்திய சட்டப்போராட்டம்.
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரும் தீர்மானம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் தமிழீழம் குறித்து பேசுகிற, போராடுகிற உரிமையை/சுதந்திரத்தை வழங்கியது.”
என்பன போன்ற மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்குமுரிய செயல்களைச் செய்தவர். இதற்கெல்லாம் பாராட்டவில்லையெனில் தமிழன் நன்றி மறந்தவன் ஆவான்.
அண்ணா உருவாக்கிய மக்கள் இயக்கமாகிய தி.மு.க.வை கபளீகரம் செய்திட கருணாநிதி செய்த தகிடுதத்தங்களையும், பித்தலாட்டங்களையும், தமிழக அரசியலையும் தமிழ் நாட்டையும் எவ்வாறு பாழ்படுத்தினார் என்பதையும், தன் குடும்ப உறுப்பினர்கள் அப்பாவி மக்கள் உழைத்துச் சேர்த்த சொத்தினை அபகரிக்கவும், அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடவும் திட்டமிட்டு சொந்தக் கட்சிக்காரர்களுக்கு சில எலும்புத்துண்டுகளை போட்டுவிட்டு குடும்ப உறுப்பினர்களைக் கட்சியிலும் அரசிலும் உயர் பதவிகளில் ஏற்றி வைத்தது குறித்தும் பல்வேறு துறை சார்ந்தோர் பலநூறு பதிவுகளைச் செய்திட்ட பிறகும் எனது மனதில் பட்டவைகளை, எனது பார்வையில் பதிவு செய்திட வேண்டும் அதையும் கருணாநிதி சாகும் முன் எழுதிவிட வேண்டுமென வெகுநாள்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். செத்தபிறகு கருணாநிதி போன்ற நபர்களுக்கும் ஊர் ஊருக்கு சிலை வைத்து புனிதர் பட்டம் வழங்கி விடுவர் என்பதை கருத்தில் கொண்டே இந்த சாகும்முன் பதிவுத் திட்டம்.
கவிதாயினி தாமரை அவர்கள் ஒரு கூட்டத்தில் ”கருணாநிதி ஒரு அமாவாசை ஜெ. அதற்கடுத்த நாள்” என்று தமிழகத்தையும், தமிழர்கள் வாழ்வையும் இருளில் தள்ளியவர் கருணாநிதி என்கிற பொருள்பட கூறிய சொற்றொடரை இந்த ஒப்பீட்டுப் பதிவுகளுக்கு தலைப்பாக வைப்பது சாலப் பொருந்துமெனக் கருதுகிறேன். தலைப்பு வழங்கிய கவிதாயினி தாமரை அவர்களுக்கு நன்றி.
ஒரு பதிவிற்கு ஒரு நிகழ்வு மட்டும் எடுத்துக்கொண்டு விரிவாக அலசவேண்டும் என எண்ணியிருக்கிறேன்.கருணாநிதி பலநூறு ஆண்டுகாலம் வாழவேண்டும், அவர் வாழும் வரை இந்த பதிவையும் நீண்ட நெடுந்தொடராக எழுத வேண்டுமென்பதே என் அவா. இந்தத் தொடர் பதிவை எழுத ஊக்கமளித்த செய்யாறு அருண் @cheyyaruarun அவர்களுக்கு நன்றி!!!
தமிழகத்திற்கு புதிய சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டுவதில் கருணாநிதி செய்த கீழ்த்தரமான அரசியலும் அதனை மருத்துவமனையாக மாற்றிய ஜெ.வின் பழிவாங்கலும் அடுத்த பதிவில்...
(தொடரும்..)


ஊடகம் எல்லாம் கையில் வைத்து தமிழனை பார்பான் காலில் வீழ்த்தி வைத்திருக்க அதற்கு மேலும் வலு சேர்க்கும் உங்கள் முயற்சி. அவாளின் ஒரு வரி அஜெண்டா தூக்கு கருணாநிதியை.. மனுவை எந்த உலகத்திலாவது நல்லோர் ஏற்பாரா? அதை பிடித்து இன்றும் நிறைவேற்ற துடிக்கிறது பார்ப்பனீயம்... ஒருவர் நல்லவர் இல்லை என்றல் தமிழருள் வேறொருவரை எடுப்பதை தவிர்த்து பார்பனியத்தை ஆதரிப்பது சரியா என்பது உங்கள் சிந்தனைக்கு.
பதிலளிநீக்கு@பெயரில்லா..
பதிலளிநீக்குகருத்துகளுக்கு நன்றி..
//ஊடகம் எல்லாம் கையில் வைத்து தமிழனை பார்பான் காலில் வீழ்த்தி வைத்திருக்க அதற்கு மேலும் வலு சேர்க்கும் உங்கள் முயற்சி.//
ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்து தமிழனைப் பார்ப்பான் கையில் வீழ்த்தி வைத்திருந்தது யார்? கருணாநிதியல்லவா?
கொலைகாரன் பார்ப்பன தலைமை பீடாதிபதி ஜெயேந்திரன் அம்பலப்படுத்தப்பட்டபோது அவனிடம் பெட்டி வாங்கிக்கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதியல்லவா?
நாடார் மனைவிக்குப் பிறந்த காரணத்தால் நாடார் சாதிச்சங்க விழாக்களில் தன்மகள் கனிமொழியைப் பங்கேற்க வைத்து ஓட்டுப் பொறுக்குவது கருணாநிதியல்லவா?
தனது வீட்டில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரைத்தான் கழுவவும், துடைக்கவும், பராமரிக்கவும் வைத்துள்ளேன் என்று பீற்றிக் கொள்வது கருணாநிதியல்லவா?
பதவிக்கு வரும்போது பார்ப்பனர்களை உயர்பதவிகளில் அமர்த்தி அவர்களுக்குத்தான் நிர்வாகம் செய்யத்தெரியும் என பாராட்டுப் பத்திரம் வாசித்தது கருணாநிதியல்லவா?
இப்படியாக மனுதர்மத்தைத் தாங்கிப்பிடிப்பதில் ஜெயலலிதாவுக்கு சற்றும் சளைத்தவரல்ல கருணாநிதி என்பது நீங்கள் அறியாததா?
//ஒருவர் நல்லவர் இல்லை என்றல் தமிழருள் வேறொருவரை எடுப்பதை தவிர்த்து பார்பனியத்தை ஆதரிப்பது சரியா என்பது உங்கள் சிந்தனைக்கு.//
அமாவாசை கருணாநிதி தமிழக அரசியலில் அகற்றப்படவேண்டியவர் என்பதை வலியுறுத்துவது மட்டுமல்ல, அமாவாசைக்கு அடுத்த நாளான ஜெயலலிதாவும் அகற்றப்படவேண்டியவர்தான். கருணாநிதியை அம்பலப்படுத்துகிற வேளையில் ஜெயலலிதாவும் சேர்த்துதான் அம்பலப்படுத்தப்படுவார். மாற்று அரசியலை முன்னெடுக்கிற வேளையில் முன்னுரிமை தரப்பட்டு முதலில் அகற்றப்படவேண்டியவர் கருணாநிதிதான். ஜெயலலிதாவுக்கு மாற்றாக மீண்டும் கருணாநிதி வந்து விடக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டிய நேரமிது.
//ஒருவர் நல்லவர் இல்லை என்றல் தமிழருள் வேறொருவரை எடுப்பதை//
இதுதான் எனது கருத்தும் தோழர்..